‘செக்ஸ் வச்சிக்கோ, லைப் என்ஜாய் பண்ணிக்கோ’ – ராதிகா!


‘செக்ஸ் வச்சிக்கோ, லைப் என்ஜாய் பண்ணிக்கோ’ – ராதிகா!

‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘வெற்றிசெல்வன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் இவருடைய நிர்வாண செல்பி படம் வாட்ஸ் அப்பிலும், இணையத்தளத்திலும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து ஒரு ஹாலிவுட் படமொன்றில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தற்போது சத்யதேவ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா மற்றும் த்ரிஷாவுடன் ‘லயன்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.  அப்போது ஒரு பேட்டியளித்திருந்தார். அப்போது செக்ஸ் குறித்து இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது…

‘‘நம் சமூகத்தில் ‘செக்ஸ்’ என்பது ஒரு தவறான பொருளாக குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது இல்லாமல் யாருமில்லை. யாரும் பிறக்கவும் முடியாது. வாழ்க்கைக்கு முக்கியமானது செக்ஸ்தான். அது உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும் ஒரு உடற்பயிற்சி போன்றது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது தவறில்லை. அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நமக்கு பசி எடுத்தால் உணவை உட்கொண்டு பசியைப் போக்கி கொள்கிறோம். அது போல உடலுக்கு பசி எடுத்தால் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை.

கடந்த 2011ம் ஆண்டு லண்டன் சென்று நடனம் கற்றபோது பிரிட்டிஷ் இசை அமைப்பாளர் பெனிடிக்ட் டெய்லர் என்பவருடன் காதல் கொண்டார் ராதிகா ஆப்தே. சிறிது காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து பின்னர் அவரையே மணந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.