தனுஷின் அனேகன் பட வழக்கு; தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!


தனுஷின் அனேகன் பட வழக்கு; தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!

சமீப காலமாக பல வெளியாகும் சமயத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது தமிழ் சினிமா. அதுவும் பெரிய நடிகரின் படம் என்றால் போதும், கதை திருட்டு, உண்மைச் சம்பவம், அரசியல் இப்படி பல காரணங்களை சொல்லி, தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் கடைசி நேர டென்ஷன் உண்டாகும்.

நாளை வெளியாகவிருக்கும் தனுஷின் ‘அனேகன்’ படத்தில் சலவை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் சமூகத்தினரை கேலி செய்யும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், அதை நீக்க கோரி வழக்கு தொடுத்து இருந்தனர் சலவை தொழிலாளர்கள். படம் வெளியானால், திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ‘அனேகன்’ படத்திற்கு எதிராக, சலவை தொழிலாளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதில்… ’படம் தணிக்கை சென்று வந்து விட்டது, இனி உங்களுக்கு பிரச்சனை என்றால் தணிக்கை குழுவினரை அணுகுங்கள்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

நல்லவேளை ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்கின்றனர் அனேகன் படக்குழுவினர்.