பிரேமம்’ படத்திற்கு ஏன் விருது இல்லை…? குழு தலைவர் விளக்கம்..!


பிரேமம்’ படத்திற்கு ஏன் விருது இல்லை…? குழு தலைவர் விளக்கம்..!

ஓரிரு தினங்களுக்கு முன் திரைப்பட விருதுகளை கேரள அரசு அறிவித்தது. இதில் துல்கர் சல்மான், பார்வதி உள்ளிட்டோருக்கு விருதுகள் கிடைத்தது. ஆனால் மக்களின் பேராதரவைப் பெற்ற ‘பிரேமம்’ படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.

இதற்கு ரசிகர்கள் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

‘பிரேமம்’ படத்திற்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என விருது பிரிவின் குழு தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…

“சிறந்த பொழுதுபோக்குப் படமாக ‘பிரேமம்’ படத்தை பார்க்கமுடிகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் விருதுகளுக்கென்று சில விதிமுறைகள் உள்ளது. அதற்கு ஏற்ப ‘பிரேமம்’ படத்தின் உருவாக்கம் இல்லை.

அதற்காக அல்ஃபோன்ஸ் புத்திரன் நல்ல இயக்குனர் இல்லை என்று அர்த்தமில்லை. இப்படத்தில் சில அணுகுமுறைகள் சரியாக தென்படவில்லை. எனவே ‘பிரேமம்’ படம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை” என்றார்.