சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு ஏற்பட்டுள்ள போட்டி!


சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு ஏற்பட்டுள்ள போட்டி!

ரியல் லைஃப்பில் பிரிந்தாலும் மீண்டும் ரீல் லைஃப்பில் இணைந்து சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழ இந்த ஜோடியே காரணமாக அமைந்துள்ளது.

இதில் சிம்புவுடன் ஆண்ட்ரியாவும் இணைந்திருப்பதால் படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்களுடன் முக்கிய கேரக்டரில் சூரி, சந்தானம், ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்புவின் தம்பி குறளரசன் இசைமையத்துள்ள இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பாக டி. ராஜேந்தர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை சிம்பு, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ருதிஹாசன் ஆகிய பிரபலங்கள் பாடியுள்ளதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. சோனி உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.