எவனாயிருந்தாலும் வெட்டுவேன்னு சொன்னதுதான் ஆர்யாதான் – விஷால் பேச்சு


எவனாயிருந்தாலும் வெட்டுவேன்னு சொன்னதுதான் ஆர்யாதான் – விஷால் பேச்சு

விஷால், ஹன்சிகா, சந்தானம், சதீஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஆம்பள. படமும் பொங்கல் அன்று வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக் குறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது நடிகர் விஷால் கூறியதாவது:
கடந்த வருடம் பொங்கலுக்கு, மத கஜ ராஜா படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தர் இயக்கத்தில் நான் நடித்தேன். ஆனால் படம் இந்நாள் வரை ரிலீஸ் ஆகவில்லை. அது எனக்கு சவாலாக இருந்தது. அந்த சவாலை ஏற்று இந்த பொங்கலுக்கு நாங்கள் இருவரும் இணையும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவான படம்தான் ‘ஆம்பள‘. நினைத்ததை சாதித்து விட்டோம். இந்தப்படத்தை தயாரிப்பதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். படத்தின் வெற்றி நான் பட்ட கஷ்டங்களை மறக்க செய்துவிட்டது.

ஆம்பள பட இசை வெளியீட்டின்போது ஆர்யா, ‘பொங்கலுக்கு ஆம்பள படத்தை ரிலீஸ் செய்வேன். அதற்கு போட்டியாக எவன் வந்தாலும் வெட்டுவேன்’  என்று நான் கூறியதாக ஒரு வெடியை கொளுத்திப் போட்டார். அவர் குறிப்பிட்டதுபோல் நான் சொல்லவே இல்லை. இனிமேல் என் பட விழாக்களுக்கு ஆர்யாவை அழைக்க மாட்டேன்” என்றார்.

விழாவில் சுந்தர்.சி. இசையமைப்பாளர் ஆதி, ஸ்ரீமன் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.