‘இனி சோலோ பெர்மான்ஸ்தான். நோ ப்ரண்ட்ஷிப்’ – சிவகார்த்திகேயன்!


‘இனி சோலோ பெர்மான்ஸ்தான். நோ ப்ரண்ட்ஷிப்’ – சிவகார்த்திகேயன்!

‘விஜய் டிவி’ சிவகார்த்திகேயன் என்றிருந்த காலம் மாறி தற்போது ‘மாஸ்’ ஹீரோ சிவகார்த்திகேயன் என்று மாறிவிட்டது. விளம்பரத்திற்கு டிவியை தேடலாம். ஆனால் டிவியே விளம்பரம் தேடினால்… ஆம். சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி என்ற பெயரில் தனக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.

‘மெரினா’ படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு 3 வருடத்தில் 9 படங்களில் நடித்துவிட்டார்.  கடந்த 2 ஆண்டுகளில் இவர் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’,  ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’ போன்ற படங்கள் இவரை முன்னணி கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தி விட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்திற்கு நல்ல மாமூல் கிடைத்துள்ளது. வசூல் வேட்டையில் ரூ 50 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறதா? என்பதை திரையுலக பிரபலங்களே ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

இந்நிலையில் அறிமுக காலங்களில் நட்புக்காக ஒருசில படங்களில் நடிக்க சம்மதித்தார். ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை நெருங்கி விட்டார். எனவே, இனி சோலோ ஹீரோ படங்களில் மட்டும்தான் நடிப்பேன். இனி நட்புக்காகவும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்டிலும் நடிக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் முடிவெடுக்கப் போகிறாராம்.

தற்போது, லிங்குசாமி தயாரிக்க பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் சூரியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.