சூப்பர் ஸ்டாருடன் இணைந்து காஜல் பாடிய டூயட்..!


சூப்பர் ஸ்டாருடன் இணைந்து காஜல் பாடிய டூயட்..!

விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னனி நாயகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தென்னிந்திய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.

கன்னட திரையுலகின் பிரலமான தயாரிப்பாளர் லோஹித். இவரும் காஜலும் நண்பர்கள் என்பதால் லோஹித் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

“சக்ரவியூகா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்துள்ளார். இவரும் காஜலும் அந்த பாடலை பாடியுள்ளனர். இதே படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலை ஜூனியர் என்.டி.ஆர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை கன்னடத்தில் இயக்கி வருகிறார்.