அஜித், சூர்யா பட நாயகியுடன் விஜய் மல்லையா தொடர்பு…?


அஜித், சூர்யா பட நாயகியுடன் விஜய் மல்லையா தொடர்பு…?

பிரபல தொழிலதிபர் ‘கிங் பிஷ்ஷர்’ விஜய் மல்லையா பல கோடி மோசடி செய்துள்ளார். எனவே அவரை வங்கிகள் மற்றும் மத்திய அரசு தேடி வரும் நிலையில் அவர் கடந்த 2ஆம் தேதி லண்டனுக்கு சென்று விட்டார்.

ஆனால் தான் தன் தொழில் காரணமாக லண்டன் வந்துள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கும் நடிகை சமீரா ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை மலையாள பத்திரிகை ஒன்று சமீபத்தில் செய்தியுடன் வெளியிட்டு இருந்தது.

இதனைக் கண்ட சமீரா ரெட்டி, தனக்கும் விஜய் மல்லையாவுக்கும் எந்தவிதமாக தொடர்பும் இல்லை. தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிகை மீது தான் வழக்கு தொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி, மாதவன், ஆர்யாவுடன் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி, தற்போது திருமணம் செய்துக் கொண்டு கணவருடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.