கமலுக்கு மட்டும்தான் கிஸ்ஸா? பவர் ஸ்டார் பாய்ச்சல்!


கமலுக்கு மட்டும்தான் கிஸ்ஸா? பவர் ஸ்டார் பாய்ச்சல்!

பிரேம்ஜி இசையமைத்து ஹீரோவாக இருவேடங்களில் நடித்து வரும் படம் ‘மாங்கா’. கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்க இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.  ஆர்.எஸ்.ராஜா என்பவர் இயக்கிவரும் இப்படத்தை பி.சி.கே.சக்திவேல் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மாங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்தும் பேசினார். அப்போது…

“என் முதல் படத்தில் நடிக்க பலரிடம் பேசினோம், ஆனால் ஒருவரும் நடிக்க முன் வரவில்லை. கடைசியாக நடிகை ரேகாவிடம் கேட்டோம். அவர் நடிக்க சம்மதித்தார். அப்படத்தில் எங்களுக்கு ஒரு டூயட் ஸாங் இருந்தது. ’புன்னகை மன்னன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை போல உணர்ச்சிமிக்க பாடல் அது. அந்த பாடலில் கமலுக்கு ரேகா முத்தம் கொடுப்பதாக காட்சி இருக்கும். எனக்கும் அதுபோல் தருவார் என்று நினைத்தேன். கமலுக்கு மட்டும் கொடுத்தார். ஆனால் எனக்கு காட்சி முடியும் வரை தரவில்லை. படமும் சில காரணங்களால் ரிலீஸ் ஆக வில்லை’ என்று கூறினார்.

இவ்விழாவில் நடிகை ரேகாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.