ஜெயம் ரவியை அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஹிப் ஹாப் தமிழா…!


ஜெயம் ரவியை அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஹிப் ஹாப் தமிழா…!

பல ஆல்பங்களை வெளியிட்டு பிரபலமானாலும் ‘ஆம்பள’ படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இதனைத் தொடர்ந்து விஷாலின் ‘கதகளி’ படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ‘தனி ஒருவன்’ படத்திற்கு தன்னிகரற்ற இசை விருந்தை கொடுத்திருந்தார் ஆதி.

மோகன் ராஜாவின் அருமையான இயக்கம், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோரின் நடிப்பு என பல சிறம்பம்சங்கள் இருந்தாலும், அப்படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் பெரும் பங்களித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

தற்போது மீண்டும் மோகன் ராஜாவுடன் கைகோர்த்து இருக்கிறார் ஆதி. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.