சூர்யாவை பாராட்டித் தள்ளிய ஹாலிவுட் கலைஞர்கள்!


சூர்யாவை பாராட்டித் தள்ளிய ஹாலிவுட் கலைஞர்கள்!

தான் ஏற்கும் கேரக்டருக்காக எந்தவொரு ரிஸ்க்கையும் எடுக்கத் தயாராக உள்ள நடிகர்கள் தமிழ் திரையுலகில் ஒரு சிலரே. அதில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சூர்யா என்று சொன்னால் அது மிகையல்ல.

‘மாஸ்’ படத்தை தொடர்ந்து தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘24’. இது கண்டிப்பாக ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் என்பது படத்தின் போஸ்டர்களிலேயே தெரிகிறது.

இப்படத்தில் சூர்யா மூன்று வேடம் ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சூர்யாவுக்கு மூன்று விதமான ஒப்பனைகள் ஹாலிவுட் கலைஞர்களால் போடப்பட்டதாம்.

சூர்யா இந்த கேரக்டர்களுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பை பார்த்த அந்த கலைஞர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். மேலும் ஒரு சில நிமிடங்களே வந்து செல்லும் கேரக்டர் என்றாலும் அதற்காக சூர்யா தன்னை வருத்திக்கொள்வதை கண்டு வியந்தே போனார்களாம்.

இதனால் நெகிழ்ந்து போன ‘24’ பட இயக்குனர் விக்ரம் குமார் தன்னுடைய ஹீரோ பற்றி அனைவரிடமும் கூறி வருகிறாராம்.