உதவுவதிலும் வித்தியாசம் காட்டும் நயன்தாரா!


உதவுவதிலும் வித்தியாசம் காட்டும் நயன்தாரா!

அண்மையில் பெய்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைவிட்டு ஒரு வாரம் ஆகியும் தேங்கி நிற்கும் தண்ணீரால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு, மற்ற மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் நிவாரண பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில், மலையாளத்தில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்று ‘அன்பு சகோதரிகளுக்கு’ என்ற பெயரில் பெண்களுக்கான பொருட்களை திரட்டி நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.

இதில் நடிகை நயன்தாராவும் இணைந்து பெண்களுக்கான உடைகள் மற்றும் அவசர தேவைக்கான பொருட்கள் கொண்ட 1000 பார்சல்களை அனுப்பியுள்ளாராம். இவை அனைத்தும் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.