விஜய், அஜித் படங்களுக்கு நிகராக சூர்யாவின் ‘24’


விஜய், அஜித் படங்களுக்கு நிகராக சூர்யாவின் ‘24’

சூர்யா மூன்று வேடத்தில் நடித்துள்ள ‘24’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விக்ரம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் இருவரும் நடித்துள்ளனர்.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மே 6ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் விஜய், அஜித் படங்களுக்கு நிகராக அதிக தியேட்டர்களில் வெளியிடுகின்றனர்.

அதாவது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 250 தியேட்டர்களில் வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.