‘கமலுடன் இணைந்த காட்சிகளை மறக்க முடியாது’ – பூஜாகுமார்


‘கமலுடன் இணைந்த காட்சிகளை மறக்க முடியாது’ – பூஜாகுமார்

கமல்ஹாசன் நடித்து வெளிவரத் தயாராகியிருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. படத்தின் பாடல் மற்றும் டிரைலர்கள் வெளியாகி விட்ட போதும் படம் வெளியீட்டு குறித்து இதுவரை சரியான தகவல்கள் இல்லை. ஏப்ரல் முதல் வாரம், பின்னர் இரண்டாம் வாரம் என தள்ளிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம் 2′ படங்களை தொடர்ந்து ‘உத்தமவில்லன்’ படத்தில் 3வது முறையாக கமலுடன் இணைந்துள்ள பூஜாகுமார் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். உலகநாயகன் பற்றியும் உத்தமவில்லன் பற்றியும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது…

“விஸ்வரூபம்’ படத்தில் பார்த்த பூஜா குமாரை ‘உத்தம வில்லன்’ படத்தில் நீங்கள் பார்க்க முடியாது. வேறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல ஆண்ட்ரியா, ஊர்வசி என ஒவ்வொரு காட்சியிலும் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். மேக்கப், டிரெஸ் எல்லாம் அணிந்து ரெடியாக குறைந்தது ஆறு மணி நேரமாகும். அதற்குப் பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.

சினிமா மீது கமலுக்கு இருக்கும் காதல் நம்மை நிச்சயம் வியப்படையச் செய்யும். 3வது முறையாக அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன். ஐ திங்க் ஐ யம் ஸோ லக்கி. திரைத்துறை சார்ந்த எதைப் பற்றிப் கேட்டாலும் நமக்கு விளக்கம் தருவார். கமலுடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியையும் என்னால் மறக்கவே முடியாது” என்று கூறினார்.