வட இந்திய வில்லன்களுக்கு சவால் விடும் ‘மருது’ வில்லன்..!
Published: May 23, 2016
என்னதான் தமிழ் படமாக இருந்தாலும், லோக்கல் ரவுடி, தாதா என சிறுசிறு வில்லன்களை காட்டினாலும், அவர்களுக்கு எல்லாம் டானாக வட இந்தியாவை சேர்ந்த ஒருவர்தான் பாஸ் ஆக இருப்பார்.
ஆனால் அவர்களுக்கே சவால் விடும் வில்லனாக டெரர்ராக மிரட்டி கொண்டி இருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ்.
நம்பியார், ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில், நம் நேட்டிவிட்டி முத்திரையுடன் கலக்கி வருகிறார் இவர்.
பாலா இயக்கத்தில் தாரைப் தப்பட்டை படத்தில் நடிகராக அறிமுகப்படுத்த பட்ட இவர், தற்போது மருதுவிலும் ரசிகர்களை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது…
‘எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்பு எனக்கு மேலும் பொறுப்பை கொடுத்துள்ளது. என் கடின உழைப்பாலும், நடிப்பின் மீது நான் கொண்டிருந்த தீராத பசியின் காரணமாக இந்த வரவேற்பு கிமைத்துள்ளது.
ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு நான் வாழ்நாள் முழுதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
-
Movie:
தாரைப் தப்பட்டை, மருது
-
Artists:
ஆர்.கே.சுரேஷ், நம்பியார், பாலா, பிரகாஷ்ராஜ், ரகுவரன்