பவர் ஸ்டாரை பத்தி நான் பேசல; ரசிகர்களுக்கு பயந்தோடும் ஹன்சிகா!


பவர் ஸ்டாரை பத்தி நான் பேசல; ரசிகர்களுக்கு பயந்தோடும் ஹன்சிகா!

‘அரண்மனை’, ‘ஆம்பள’, ‘மீகாமன்’ என 3 ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘வாலு’.  இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

அப்பேட்டியின் போது… “மக்களுக்கு நல்லது செய்கிறேன். சேவை செய்ய போகிறேன் என்று மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் தற்போது அரசியலுக்கு வருகின்றனர்” என்று ஒரு கருத்தை கூறியிருந்தார். இப்பேட்டியை சில டிவி சேனல்களும் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டன.

இச்செய்தி மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்த ஆந்திர மாநில பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ரசிகர்கள் ஹன்சிகாவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஹன்சிகாவின் கருத்து எதிராக பேசத் தொடங்கி விட்டனர்.

தற்போது இப்பிரச்சினை குறித்து, ஹன்சிகா கூறியதாவது… “நடிகர் பவன் கல்யாண் அவர்களை நினைத்தோ அல்லது அவரின் பெயரை பயன்படுத்தியோ நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பொதுவாக கூறினேன். ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்று பவர்ஸ்டாரின் ரசிகர்களுக்கு பயந்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.