‘என் படத்தில் பிரகாஷ்ராஜ் வேண்டாம்’ – விஜய் உத்தரவு!


‘என் படத்தில் பிரகாஷ்ராஜ் வேண்டாம்’ – விஜய் உத்தரவு!

சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தை முடித்துவிட்டு கொஞ்சம் ப்ரீயாக இருக்கிறார் இளையதளபதி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ‘சச்சின்’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யின் மூன்றாவது படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு.

இப்படம் விஜயகாந்த் நடித்து மாபெரும் ஹிட்டடித்த ‘சத்ரியன்’ படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் போலீஸாகவும் ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் நடிக்கிறாராம்.

இந்நிலையில் விஜய்க்கு தந்தையாக நடிக்க, பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்யவிருந்தார் இயக்குனர். இதனையறிந்த விஜய், “என்னுடைய பல படங்களில் பிரகாஷ்ராஜ் சார் வில்லனாக நடித்துள்ளார். தற்போது அவர் தந்தையாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாமே” என்றாராம். எனவே, அந்த கதாபாத்திரத்தில் பாராதிராஜாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.