” தவறவிட்ட கமல்; தக்கவைப்பாரா இந்த வருடம்??”


” தவறவிட்ட கமல்; தக்கவைப்பாரா இந்த வருடம்??”

2015ஆம் ஆண்டு 3 படங்களைக் கொடுத்தார் கமல்ஹாசன்.

இதில் முதலில் வெளியான உத்தமவில்லன் ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை என்றாலும் அதன்பின் வெளியான பாபநாசம் மற்றும் தூங்காவனம் ஆகியவை “ஓகே”வானது.

இந்த வருடமும் 3 படங்களை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் உலகநாயகன்.

முதலில் ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன், அமலா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இது ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தின் 2ஆம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் எம். செல்வாவுடன் இணையும் ஒரு படம்.

தவிர அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘விஸ்வரூபம் 2′ ஆகிய படங்களையும் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறாராம் கமல்.

கடந்த வருடத்தில் தவறவிட்ட ஹாட்ரிக் வெற்றியை இவ்வருடம் கமல் கொடுப்பாரா? எனப் பார்க்கலாம்.