நான் ஹிட் கொடுக்கலையா? லஷ்மிமேனனை கேட்கும் நந்திதா!


நான் ஹிட் கொடுக்கலையா? லஷ்மிமேனனை கேட்கும் நந்திதா!

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை நந்திதா. படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து இளைஞர்களின் நெஞ்சங்களை அட்டக்கத்தி மூலம் குத்தி சென்றார். படத்தின் ராசியா இவரின் ராசியா தெரியவில்லை இதன் பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே கிராமத்து கதாபாத்திரங்களாக அமைந்தது.

நந்திதா நடித்த ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இருந்தபோதிலும் இவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தது. இவருக்கு சான்ஸ் தரும் தயாரிப்பாளர்களும் இவருக்கு அட்வான்ஸோடு ஒரு செட் பாவாடை, தாவணி கொண்டு வந்தனர். மாடர்ன் பெண் கேரக்டர்கள் வந்தபாடில்லை. நந்திதா எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்பாரில்லை.

தான் நடித்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து நன்றாக ஓடியபோதிலும், தனது கேரக்டர்கள் பேசப்பட்ட போதிலும், தனக்கு நல்ல அந்தஸ்தோ, அதிக சம்பளமோ கிடைக்கவில்லை என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், தன்னை போலவே கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் லக்ஷ்மி மேனனை மட்டும் ராசியான நாயகி என்று கூறி அவருக்கு மட்டும் சம்பளத்தை ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம் என கேட்கிறாராம்.

தற்போது விஜய்யுடன் ‘புலி’, ‘உப்பு கருவாடு’, ‘இடம் பொரும் ஏவல்’ போன்ற படங்களில் நந்திதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனுங்க புரொடியூசரு… இவிங்க சொல்றது நியாயம்தானுங்களே…