‘என் ‘தலைவா’ விஜய்க்கு பெருமை சேர்ப்பேன்…’ களம் நாயகன் ஸ்ரீனி


‘என் ‘தலைவா’ விஜய்க்கு பெருமை சேர்ப்பேன்…’ களம் நாயகன் ஸ்ரீனி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை துவங்கியவர் ஸ்ரீனி. இதனைத் தொடர்ந்து மதராசப்பட்டினம், வேலூர் மாவட்டம், தாண்டவம் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர்கள் P வாசு, ஜான் மகேந்திரன் (சச்சின்) மற்றும் காலம் சென்ற தாம் தூம் புகழ் ஜீவா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர் நாயகனாக நடித்துள்ள களம் வருகிற ஏப்ரல் 29ஆம் ரிலீஸ் ஆகிறது. தன் களம் குறித்து, ஸ்ரீனி கூறியது…

“எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை இருக்கும். எனக்கு அப்படி அமைந்த படம் தலைவா.

நடிப்பு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தை எனக்கு கற்று கொடுத்தது விஜய் சார்தான். இளைய தளபதியின் தீவிர ரசிகன் நான்.

 

Kalam 2

அவர் இந்தளவு உயரத்திற்கு வரக்காரணம் என்ன? என்பதை அவருக்கு அருகில் இருந்தபோதுதான் நான் உணர்ந்தேன்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் அதிக அக்கறையுடன் தீவிரமாக இருப்பார். விஜய் சார் படிச்ச காலேஜ்ஜில்தான் நானும் படித்தேன். ஒரு நல்ல நடிகன் என்று பெயர் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்பேன் ” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது….

“களம் படக்கதையை கேட்ட உடனே நடிக்க முடிவு செய்துவிட்டேன். என்னுடைய கேரக்டர் அவ்வளவு பவர்புல்லாக இருக்கும்.

படத்தில் அகோரி வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு பேய் படத்தை கூட நான் தனியாக அமர்ந்து பார்த்ததில்லை.

 

Kalam 3

ஆனால் களம் படத்தில் நடித்த பிறகு, பேய் படத்தை தனியாக பார்க்கும் தைரியம் வந்துள்ளது.”

என்று கூறினார் இந்த களம் நாயகன் ஸ்ரீனி.

 

Kalam 4
ராபர்ட் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிவாசன், அம்சத், லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, மதுசூதன் ராவ், நாசர், பூஜா, கனி குஸ்ருதி, பேபி ஹியா, ரேகா சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அருள் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரகாஷ் நிக்கி இசையமைத்துள்ளார்.