மீனாவை மிஞ்சும் க்யூட் குட்டி நைனிகா…!


மீனாவை மிஞ்சும் க்யூட் குட்டி நைனிகா…!

குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ரஜினியுடன் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மீனா. அதன்பின்னர் ரஜினிக்கே ஜோடியாகி அப்போதும் ரசிகர்களால் பொருத்தமான ஜோடி என ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தற்போது இவரின் நான்கு வயது மகள் நைனிகாவை விஜய்யுடன் தெறி படத்தில் இணைந்து நடிக்க வைத்து விட்டார்.

நேற்று நடைபெற்ற தெறி ஆடியோ விழாவில் முதலில் மேடை ஏறியவர் நைனிகாதான். கூடவே இவரது அம்மா மீனாவும் இருந்தார்.

ரசிகர்கள் இவருக்கு பலத்த கைத்தட்டல்களை கொடுக்க, மைக் வாங்கியவர் என்ன செய்வதன்று அறியாமல், தன் அழகான கண்களை உருட்டி தன் அம்மா கண்ணழகி மீனாவை நோக்கினார்.

பின்னர் மீனாவை நோக்கி தொகுப்பாளர் ரம்யா பேசத் தொடங்கினார். அப்போது பதிலளித்து மீனா பேசியதாவது…

விஜய்யுடன் நடிக்க 4-5 முறைகள் வாய்ப்பு வந்தது. ஆனால் கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அவருடன் நடனம் ஆட முடிந்தது.

விஜய்யின் டான்ஸ் பிடிக்கும். அவரின் காமெடி சென்ஸ் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும், அதிகம் பேச மாட்டாரு விஜய்” என்றார் மீனா.

இதனைத் தொடர்ந்து ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க..? என்பது போல் மீனா, குட்டி நைனிகாவுக்கு சொல்லிக் கொடுக்க, விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? எனக் கேட்டார் நைனி. அதற்கு விஜய்யும் எழுந்து நின்று நான் இங்கே இருக்கேன் என்றவுடன் ரசிகர்களின் கைதட்டல் அதிகமானது.

விழாவின் இறுதியாக இசைத்தட்டு வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பலரும் அந்த சிடி மீது இருந்த துணியை அவிழ்க்க முயலுகையில், அதை சுற்றியிருந்த ரிப்பனை கழட்டிவிட்டு அனைவரையும் அசத்தினார் நைனி.

மேலும் தெறி படத்தின் ட்ரைலரிலும் பலரது பாராட்டுக்களை அள்ளியிருக்கிறார் இந்த சுட்டி.

படப்பிடிப்பில் நைனிகா செய்த குறும்புகள்…

நைனிகா செட்டுக்குள் வந்துவிட்டார் விஜய்யே கொஞ்சம் பயப்படுவாராம். ஷாட் ரெடியாகும் நேரத்தில், விஜய் அங்கிள் எனக்கு தூக்கம் வருது. என்று சில சமயம் போய்விடுவாராம்.

அப்போது அந்த கேமரா அங்கிள் ஜார்ஜ் கோவரக்காரரு. அப்புறம் லைட் போய்ட்டா எடுக்க மாட்டாரு என்றால், அப்படியா அங்கிள்..? ஆர் யூ ஆங்ரி..? என்று கேட்டுவிட்டு தன் ஷாட்டை முடித்துக் கொடுப்பாராம் இந்த க்யூட் குட்டி நைனி.

மீனா… விட்டா உங்களையே மிஞ்சுடுவார் நைனி குட்டி. அவருக்கு பெரிய த்ரிஷ்டி சுத்தி போடுங்க… எங்க கண்ணே பட்டுடிச்சி.