சிம்பு விலக, நடிகர் சங்கம் என்ன கிளப்..? விஷால் பரபரப்பு பேச்சு..!


சிம்பு விலக, நடிகர் சங்கம் என்ன கிளப்..? விஷால் பரபரப்பு பேச்சு..!

இன்று மதியம் நடிகர் சங்கம் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு விஷால் பதிலளித்து கூறியதாவது…

“சிம்பு எடுத்துள்ள முடிவு அவருடைய தனிப்பட்ட கருத்து.

நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப்போ, லீ கிளப்போ கிடையாது. அவர் விலகி செல்ல. அவரும் சங்கத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சினையில் நடிகர் சங்கம் ஆதரவு இல்லை என்றார். நாங்கள் உதவ தயாராக இருந்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

சிம்பு என் சகோதரர் போன்றவர். அவரை எனக்கு பிடிக்கும். அவரை நான் மதிக்கிறேன்” என்றார்.