சசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..!


சசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..!

ஸ்டூடியோ 9 என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருபவர் ஆர்.கே. சுரேஷ்.

விஜய் ஆண்டனி நடித்த சலீம், விஜய்சேதுபதி நடித்து வரும் தர்மதுரை ஆகிய படங்களை தயாரித்துள்ளார் இவர்

இப்படி சொன்னால் கூட பலபேருக்கு இவரை தெரியாது.

தாரை தப்பட்டை மற்றும் மருது படங்களில் வில்லனாக நடித்து தாய்மார்களை பயமுறுத்தியவர் என்று சொன்னால் உடனே தெரிந்து விடும்.

இந்த இருபடங்களின் மூலம் வட இந்திய வில்லன்களுக்கு சவால் விட்டுள்ள ஆர் கே சுரேஷுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறதாம்.

சசிகுமார், விஷாலை மிரட்டியது போல அஜித்தை மிரட்ட வேண்டுமாம். அதாவது அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதானாம் அது.

முருகதாஸ் சார்… மிரட்டல் படத்துல இவரை வச்சி ‘தல’யை மிரட்டலாமா..?