‘இனிமே இப்படித்தான்’; நண்பர்களுக்காக இனிமே அப்படித்தான்!


‘இனிமே இப்படித்தான்’; நண்பர்களுக்காக இனிமே அப்படித்தான்!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படங்களை தொடர்ந்து தனி ஹீரோவாக சந்தானம் நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இவருக்கு ஜோடியாக அஸ்னா ஷாவேரி மற்றும் அகிலா கிஷோர் இருவரும் நடித்துள்ளனர்.

தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பாக சந்தானம் தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் இவர்களுடன் தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் சந்தானத்தின் திரையுலக நண்பர்களான சிம்பு, ஆர்யா, உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சந்தானம் பேசியதாவது….

“இனிமே இப்படித்தான் என்றிருந்தாலும் சில நேரம் சிலருக்காக இனிமே அப்படித்தான். சில கொள்கைகள் இருந்தாலும் நம் நண்பர்களுக்காக விட்டுக் கொடுப்பது சந்தோஷம். அதுபோல நான் இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றாலும் என் நண்பர்களுக்காக அவர்களின் படங்களில் மட்டும் காமெடியனாக நடிப்பேன்” என்றார்.