ரஜினி லெவலை விட மேல செல்வேன் – ‘கான்’FIDENT சிம்பு


ரஜினி லெவலை விட மேல செல்வேன் – ‘கான்’FIDENT சிம்பு

பல ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக் களிப்பில் திளைத்து வருகிறார் ‘வாலு’ சிம்பு. இந்நிலையில் படம் வெற்றி குறித்தும் தன்னுடைய அடுத்த கட்ட திட்டங்கள் பற்றியும் ஒரு பேட்டியளித்தார். அதில் பல கேள்விகளுக்கு தன் ஸ்டைலில் அதிரடியாக பதிலளித்தார் சிம்பு. அவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறோம். அதில்…

  • “ஒரு 3 வருஷம் கழிச்சு ஒரு படம் வந்தா கண்டிப்பாக இந்த அளவு ஹிட் கிடைச்சு இருக்காது. ஆனா எனக்கு அது கிடைச்சிருக்கு. இதுக்கு காரணம் கடவுள் அனுக்கிரகம் தான் சொல்லனும். அதுக்கு என் ரசிகர்கள்தான் மெயின் காரணம். அவுங்கள எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இனிமே கண்டிப்பாக வருஷத்துக்கு இரண்டு அல்லது மூன்று படம் கொடுப்பேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.
  • நான் சூட்டிங்க்கு ரொம்ப லேட்டா போறேன் சொல்றாங்க… நான் ஆபிஸ் வேலை பார்க்கல. கரெக்ட் டைம் போயிட்டு ரிட்டர்ன் வர்றதுக்கு… ஒரு ஷாட் எடுக்கிறாங்கன்னா அதுக்கு முதல்ல என்னை நான் தயார் படுத்திக்கனும். அந்த மனநிலைக்கு நான் வரனும். இல்லேன்னா நான் போக மாட்டேன். படப்பிடிப்பு நின்னாலும் பரவாயில்லை. ஒரு முழு ஈடுபாட்டோட நடிச்சுக் கொடுக்கனும். அதான்.
  • அதுமட்டுமில்ல முதல் நாள் இரவு, விடிய, விடிய இசையமைப்பாளருடன் ஏதாவது ஒரு வேலையில இல்லேன்னா ‘எடிட்டிங்’ இப்படி ஏதாச்சும் ஒரு வேலையில இருந்திருப்பேன் அதான் அடுத்த நாள் லேட்டா போயிருப்பேன். மத்தபடி லேட்டாத்தான் போவேன் அப்படி கட்டாயம் இல்லை.
  • முன்னாடி சூப்பர் ஸ்டார் ரஜினி போல் வரணும் ஆசை இருந்திருச்சி. ஆனா இப்போ இல்ல. இப்போ கடவுள நம்புறேன். அவன் நினைச்சா என்னை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கலாம். ஏன் அந்த அந்தஸ்த்துக்கு மேலயும் என்னை கொண்டு போகலாம்.
  • படங்கள் டைரக்ட் பண்ற ஆசை இருக்கு. ரஜினி சார் படத்தை இயக்க ஆசை. இல்லேன்னா அஜித் நடிச்சா அவர் படத்த இயக்க ஆசை.  இவ்வாறு பேட்டியில் கூறினார்.