‘சூர்யா விட்டுட்டாரு… ஆனால் விஷால் விடமாட்டாரு..!


‘சூர்யா விட்டுட்டாரு… ஆனால் விஷால் விடமாட்டாரு..!

முத்தையா, விஷால், சூரி, இமான் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மருது. இப்படத்தை தெலுங்கில் ராயுடு என்ற பெயரில் வெளியிடவுள்ளனர்.

இருமொழிகளிலும் மே 20ஆம் தேதி படம் ரீலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் விஷால் பேசியதாவது…

சில தினங்களுக்கு முன் வெளியான 24 படத்திற்கு இப்போதே திருட்டு விசிடி வந்துவிட்டது. ஆனால் அதை தடுக்க எந்த முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை.

ஆனால் மருது வெளியாகும் போது, திருட்டு விசிடி வெளியானால் நான் சும்மா இருக்க மாட்டேன்.

நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்கி அதை தடுப்பேன். தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன்.

சினிமாவை சீரழித்து வரும் திருட்டு விசிடியை ஒழிக்க நான் ஒருவனே தனியாக போராடிக் கொண்டிருக்கிறேன்.

சட்டம் நமக்கு சப்போர்ட்டாக தான் இருக்கிறது. இதற்கு தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். எல்லாரும் இணைந்தால் இதை முழுமையாக தடுக்க முடியும்“ என்றார்.