விக்ரம் பிரபுவின் வித்தியாசமான ஆசை… நிறைவேற்றுவாரா பிரபு..?


விக்ரம் பிரபுவின் வித்தியாசமான ஆசை… நிறைவேற்றுவாரா பிரபு..?

அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’

பிரபுவின் 200வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா ஜாவேரி நடிக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் விக்ரம் பிரபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

“அனைவரும் என் பெயருடன் அப்பா பெயரை இணைத்து அழைப்பதை பெருமையாக கருதுகிறேன். என் காலேஜ் ப்ரண்ட்ஸ் கூட என்னை பிரபு என்றுதான் அழைப்பார்கள்.

என் தந்தையுடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுகிறேன். அது தந்தை மகனாகவோ அல்லது அண்ணன் தம்பியாகவோ நடிக்க ஆசைப்படுகிறேன்.” என்று பேசினார்.