ரஜினியாக ஆசைப்பட்டேன். ஆனா… காதலில் ஹாட்ரிக் கிடைத்தது – சிம்பு சீற்றம்.


ரஜினியாக ஆசைப்பட்டேன். ஆனா… காதலில் ஹாட்ரிக் கிடைத்தது – சிம்பு சீற்றம்.

என்னங்க டைட்டில் பார்த்து ஷாக்காயிட்டீங்களா? இருங்க.. அதுக்கு முன்ன ஒரு இன்ட்ரோ கொடுக்கனுமில்ல. இன்னைக்கு தனுஷ் படம் வந்திருக்கு. அப்போ அவரோட இன்று நட்பு பாராட்டும் சிம்பு பற்றி சொல்லலேன்னான அது வம்பாயிடும் இல்ல அதான். அதுமட்டுமில்லாமல் காதலர்தினம் வரும்போது காதலில் ஹாட்ரிக் அடித்த (3 தோல்வி ஹாட்ரிக்) சிம்புவை பத்தி கொஞ்சம் ஷேர் பண்ணிக்கலாம் இல்லையா? அதான்.

சிம்பு நடித்து இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளிவரவில்லை. ஆனால், இந்த ஆண்டு நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியாவுடன் ‘இது நம்ம ஆளு’,  ஹன்சிகாவுடன் ‘வாலு’, உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளன. இதனால் சிம்பு சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில்…

“எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? கல்யாணம்கிறது ஒருத்தர் மனச ஒருத்தர் புரிஞ்சிக்கிறது. ஆனா, இப்போ கல்யாணம் நடக்கிற அளவுக்கு விவாகரத்தும் நடக்கத் தொடங்கிடுச்சு. கல்யாணம் பண்ணி விவாகரத்தாகி, அப்புறம் புரிதல் உண்டாகி, அதுக்கப்புறம்தான் நடக்கிற கல்யாணம் சரியா அமையுது.

இந்த பொண்ணுகிட்ட சாகுற வரைக்கும் தோற்கலாம். அவளுக்காக வாழனும் அப்படி ஒரு புரிதல் உள்ள ஒருத்தி கிடைக்கட்டும், திருமணம் செய்து கொள்கிறேன்” நான் காதலிப்பதே ஒரு வேடிக்கை போன்றதுதான். அதில் நான் மூன்று பெண்களின் காதலை கடந்து வந்துவிட்டேன். இதை என்னாலேயே நம்ப முடியவில்லை. காதல் முறிந்துவிட்டதே என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் ரஜினி சார் போன்று சூப்பர்ஸ்டார் ஆக ஆசைப்பட்டேன். தற்போது அந்த ஆசை இல்லை” என்றார்.