விஜய்யுடன் நடிக்க மறுத்த அர்விந்த் சாமி!


விஜய்யுடன் நடிக்க மறுத்த அர்விந்த் சாமி!

ஓர் அறிமுக நடிகர், அறிமுக நடிகை, அறிமுக இயக்குனர் ஆகிய இவர்கள்… ஒரு முன்னணி ஹீரோவுடன் நடித்தால் பிரபலமடைந்துவிடலாம். அவர் ஏற்கெனவே பிரபலமாக இருந்தாலும் ஒரு சில முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க விரும்புவர்.

இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அர்விந்த்சாமி விஜய்யுடன் நடிக்க மறுத்துள்ளார். சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய அர்விந்த்சாமி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது ஒரு ரசிகர் அஜித், விஜய்யுடன் நடிப்பீர்களா? எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அர்விந்த் சாமி ‘கதையும் என் கேரக்டரும் நன்றாக அமையும் பட்சத்தில் யாருடன் வேண்டுமானாலும் நடிக்க காத்திருக்கிறேன்’ என்றார். இதன்பின்னர் விஜய் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் விஜய்க்கு வில்லனாக நடிப்பீர்களா’ என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர் ‘இல்லை’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையில், ‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து வில்லன் வேடத்தில் இனி நடிக்க மாட்டேன் என அர்விந்த் சாமி தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.