ரஜினியை பார்த்து எனக்கு பயமில்லை – தனுஷ்


ரஜினியை பார்த்து எனக்கு பயமில்லை – தனுஷ்

துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமாகி, இன்றும் அதே துள்ளும் இளமையோடு பாலிவுட் வரை துள்ளி வலம் வருகிறார் தனுஷ். பக்கத்து வீட்டு பையன் போல தோன்றும் இவர் வெகுநாட்கள் தாக்கு பிடிக்க மாட்டார் என்பதையெல்லாம் உடைத்து, இளம் வயதிலேயே தேசிய விருது வென்று பாலிவுட் சென்று அமிதாப்பச்சனுடன் களம் கண்டுள்ளார் இவர்.

தற்போது நடித்து முடித்துள்ள ஷமிதாப், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் லண்டன் சென்றுள்ளார் தனுஷ். அங்கு தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பேட்டி காண்பவர் ‘நீங்கள் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தீர்கள், உங்கள் காதலை அவரின் அப்பாவான சூப்பர் ஸ்டாரிடம் சொல்லி எப்படி சம்மதிக்க வைத்தீர்கள். ரஜினியை பார்க்கும் போது பயம் இல்லையா’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு தனுஷ் பதிலளிக்கையில்… ‘நான் ஏன் பயப்படனும், தப்பு பண்ணினவங்கதான் பயப்படனும். ரஜினி சாரை பார்க்க எனக்கு பயமில்லை. அதுமட்டுமில்லாமல், ரஜினி சார், ஒரு போதும் யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டார், எல்லோரையும் சரிசமமாக நடத்தும் நல்ல மனிதர் அவர்’ என வெளிப்படையாக கூறினார்.