‘சிவகார்த்திகேயன் -விஜய்சேதுபதியோடு நடிக்க ஆசைப்படும் கேரளத்து வரவு..!


‘சிவகார்த்திகேயன் -விஜய்சேதுபதியோடு நடிக்க ஆசைப்படும் கேரளத்து வரவு..!

தமிழ் சினிமா-மலையாள சினிமா என் இரண்டையும் பிரித்து விடலாம்.

ஆனால் தமிழ் சினிமா – கேரள நடிகைகள் என இரண்டையும் எப்பவும் பிரிக்க முடியாது.

அம்பிகா ராதா முதல் இன்றைய நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் வரை அது கன்னித்தீவு கதையாக தொடர்கிறது.

இதில் புது வரவாக வந்து இணைந்துள்ளவர்தான் நடிகை மிர்துளா.

‘ஆயால் நானள்ள’ என்ற மலையாள படத்தில் பஹத்தோடு நடித்திருக்கிறார்.

தற்போது இவரது கனவை தமிழ் சினிமா பக்கம் திருப்பியிருக்கிறார்.

அதை அவரே சொல்கிறார்…

“சிறுவயது முதலே நடிக்கத்தான் ஆசை. அப்போவே நீ என்னவாக ஆக விரும்புகிறாய்? என்று பலர் கேட்டபோதும் நடிகையாக வேண்டும் என்றேன்.

நடிகைகள் மீது கோலிவுட் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமளிக்கிறது.

எல்லா தமிழ் படங்களையும் பார்த்துவிடுவேன். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் வித்தியாசமான நடிப்பு எனக்கு பிடிக்கும்.

நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருந்தால், அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என நம்புகிறேன்” என்றார் மிர்துளா.

Related