லாரன்சுக்காக 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்…!


லாரன்சுக்காக 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்…!

விஜய்-அட்லி கூட்டணியில் வெளியான தெறி, இரண்டு வாரங்களை கடந்த போதிலும் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நைனிகாவின் மழலை கலந்த நடிப்பு குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

எனவே, லாரன்ஸ் நடத்தி வரும் இல்லத்தில் உள்ள குழந்தைகளும் தெறி படத்தை பார்க்க தங்கள் ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த குழந்தைகளின் ஆசையை லாரன்ஸ், விஜய்க்கு தெரிவித்துள்ளார். அதற்கு விஜய்யோ… ‘ஓகே நண்பா நிச்சயம் ஏற்பாடு செய்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அந்த 60 குழந்தைகளுக்காக ‘தெறி’ சிறப்புக் காட்சியை விஜய் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

எங்களை மகிழ்வித்த விஜய்க்கு நன்றி என லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.