தனுஷுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்… ‘கொடி’ பிடிக்கும் எல்எல்ஏ..!


தனுஷுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்… ‘கொடி’ பிடிக்கும் எல்எல்ஏ..!

கிருமி படத்தில் மிரட்டலான போலீஸ் ஆக நடித்தவர் டேவிட்.

மேலும் அரிமா நம்பி, காக்கி சட்டை, மாலை நேரத்து மயக்கம். தனிஒருவன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் கிருமியே இவருக்கு பெயரை பெற்றுத் தந்தது.

எனவே தற்போது, கார்த்தியின் காஷ்மோரா, சசிகுமாரின் கிடாரி ஆகிய படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ்-த்ரிஷா நடிக்கும் கொடி படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து அவர் கூறியதாவது…

இதில் எம்.எல்.ஏ வேடமேற்று நடிக்கிறேன். தேசிய விருது பெற்ற தனுசுடன் நடித்தது ரொம்ப பெருமையாக உள்ளது.
தனுஷ் என்னிடம் எளிமையாக பேசிப் பழகியதை மறக்க முடியாது. இப்படத்தில் வாய்ப்பளித்த அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்றார்.