லிங்குசாமியிடம் சிக்கிய அடுத்த ஹீரோ விஜய்சேதுபதி!


லிங்குசாமியிடம் சிக்கிய அடுத்த ஹீரோ விஜய்சேதுபதி!

‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ என ஹாட்ரிக் அடித்த விஜய்சேதுபதி பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதன்பின்னர் இவரது நடிப்பில் நிறைய படங்கள் வந்தாலும் கமர்ஷியல் வெற்றியை பெறவில்லை. இறுதியாக இவர் தயாரித்து நடித்த ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படமும் இனிக்கவில்லை.

எனவே இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்களுக்காக காத்திருக்கிறார். இவர் நடித்து தனுஷ் தயாரித்துள்ள ‘நானும் ரவுடிதான்’ படம் காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இறுதியில் சீனுராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை வெளியாகும் என காத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையால் படம் சிக்கிக் கொண்டுள்ளது.

இதேபோல் லிங்குசாமி தயாரித்த சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படமும் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் இயக்குனர் பொன்ராம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸை கிண்டல் செய்து கருத்து வெளியிட்டிருந்தார். “என்னதான் திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக கொட்டினாலும் கடன் தீரவில்லை” என அவர் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்