தேர்தல் நேரத்தில் சிம்புவுடன் மோதும் பாபி சிம்ஹா…!


தேர்தல் நேரத்தில் சிம்புவுடன் மோதும் பாபி சிம்ஹா…!

சிம்பு நடித்து வெகு நாட்களாக பிரச்சினையில் தவித்த இது நம்ம ஆளு படத்திற்கு ஒரு வழியாக விடிவு காலம் பிறந்துள்ளது.

சிம்புவுடன் நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள இப்படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யு சான்றிதழும் கிடைத்துவிட்டது. எனவே இப்படத்தை வருகிற மே 6ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

இதே நாளில், பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோ 2 படமும் வெளியாகிறது.

சரத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் மற்றும் மீடியாவின் நிகழ்வுகளை ஆராய்ந்துள்ளதாம். குறிப்பாக அரசியலை அலசியுள்ள இப்படம் தேர்தல் நேரத்தில் வருவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மே 16 என்பது நினைவிருக்கிறதுதானே…