பாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..!


பாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..!

தமிழ் சினிமாவில் சில வருடங்களாகவே ஹீரோக்கள் அறிமுகமாகும் போது, ஓப்பனிங் பாடல்கள் இருந்து வருகின்றது.

இதற்கு உதாரணமாக அண்ணாமலை முதல் ரஜினியின் பல படங்களைச் சொல்லலாம். ஆனால் சிவாஜி, எந்திரன் படங்களில் அப்படியான பாடல் இல்லை.

அதுபோல் விஜய்யின் தெறி படத்தில் சாதாரணமாக அறிமுகமாவார் விஜய். வேதாளம் படத்தில் கூட அஜித்தின் அறிமுகம் நார்மலா இருக்கும்.

இவர்களை தொடர்ந்து சிம்புவும் இது நம்ம ஆளு படத்தில் எந்த வித ஓப்பனிங் சாங் இல்லாமல் அறிமுகமாகிறாராம்.

இதுகுறித்து சிம்புவே கூறியதாவது…

‘முதன்முறையாக ஓப்பனிங் பாட்டு இல்லாமல், சண்டைக்காட்சி எதுவும் இல்லாமல் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இது ஒரு ரிஸ்க்கான விஷயம்தான்.

ஆனால் கதையின் மீது இருந்த நம்பிக்கையினால் இப்படி நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இப்படம் எல்லாருக்கும் புரியும் விதத்திலும் பிடிக்கும் விதத்திலும் இருக்கும்.

இன்றைய இளம் தம்பதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நானும் நயன்தாராவும் நடித்துள்ளோம்.

இப்படத்திற்கு பிறகு மீண்டும் என் தம்பி குறளுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன்”

இவ்வாறு கூறினார் சிம்பு.