அட ‘இது நம்ம ஆளு’ சிம்பு-நயன்தாரா ரெடியாம்!


அட ‘இது நம்ம ஆளு’ சிம்பு-நயன்தாரா ரெடியாம்!

‘வாலு’ படம் வெளியானவுடன் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் உடனடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் குறளரசனின் தாமதத்தால் படம் தள்ளிக் கொண்டே போனது.

இப்படத்தின் பாடல்களையும் பணத்தையும் ரெடி செய்த பின்னர் வருகிறேன் என பாண்டிராஜ் கூறி சென்றார். இதனிடையில் சூர்யாவின் ‘பசங்க 2’  படத்தை இயக்கி வெளியீட்டுக்கு தயார் செய்து விட்டார். மேலும் விஷாலின் ‘கதகளி’ படத்தையும் தொடங்கி விட்டார் பாண்டிராஜ். விஷால் நடிகர் சங்கத்தில் பிஸியாக இருந்ததால் தற்போது மீண்டும் ‘கதகளி’ ஆட்டம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரியவந்துள்ளது. எனவே படத்தின் பாடல்களை நவம்பர் மாதத்திலும் (தீபாவளிக்கு பிறகு) படத்தை டிசம்பர் மாதத்திலும் வெளியிடயிருக்கிறார்களாம்.

இதில் சிம்புவுடன் நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய டி. ராஜேந்தர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.