நயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..!


நயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..!

பொதுவாக ஒரு படம் தயாராகி ரிலீசுக்கு லேட் ஆனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும்.

ஆனால் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறளரசன் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பற்றிய தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

  • இப்படத்திற்கு முதலில் ‘லவ்ன்னா லவ்… அப்படி ஒரு லவ்’ என்றுதான் தலைப்பு வைத்தார்கள்.
  • சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா இதில் நடிக்க ஒப்பந்தமானவுடன் ‘இது நம்ம ஆளு’ என இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
  • இதில் சந்தானம் நடிக்க வேண்டும் என்று சிம்பு விரும்பினாராம். ஆனால் சூரிதான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார் பாண்டிராஜ்.
  •  இது ஐடி கம்பெனியில் பணிபுரியும் தம்பதியரின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.
  •  இப்படத்தில் சண்டைக் காட்சியே இல்லையாம்.
  • இதில் சிம்பு – ஆண்ட்ரியா மற்றும் சிம்பு – நயன்தாரா என்ற இரு காதல்கள் உள்ளதை போல் மூன்றாவது காதலும் உள்ளதாம். அது படுரகசியம்.
  • படத்தில் சூரியின் காமெடி காட்சிகள் அப்ளாஸை அள்ளும் என்கின்றனர்.