சிம்பு பிறந்த நாளில் பரபரப்பை உண்டாக்கப் போகும் பாடல்கள்..!


சிம்பு பிறந்த நாளில் பரபரப்பை உண்டாக்கப் போகும் பாடல்கள்..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுடன் நயன்தாரா, சூரி, ஆன்ட்ரியா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்க குறளரசன் இசையமைத்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்க அன்றைய தினத்தில் இது நம்ம ஆளு படப்பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

சில நாட்களாக சிம்புவின் பாடல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பீப் பாடலை தொடர்ந்து, அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெற்ற தள்ளிப் போகாதே பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இது நம்ம ஆளு பாடல்களும் வெளியாகவிருப்பதால் நிச்சயம் பரபரப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம்.