‘அஜித் விரும்பினால் பாட்ஷா கதை ரெடி’ – சுரேஷ் கிருஷ்ணா!


‘அஜித் விரும்பினால் பாட்ஷா கதை ரெடி’ – சுரேஷ் கிருஷ்ணா!

நேற்று 09/09/2015 முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரஜினி, “ஒரே ஒரு பாட்ஷாதான். இனி அப்படியொரு படம் வராது” என தெரிவித்திருந்தார். எனவே மீண்டும் பாட்ஷா பற்றிய பட்டிமன்றங்கள் கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துவிட்டன.

கடந்த 1995ஆம் வெளியான ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். படம் வந்து 20 வருடங்களை கடந்து விட்டாலும் இன்று டிவிக்களில் ஒளிப்பரப்பினாலும் சேனலை மாற்றாமல் பார்க்கும் வெறித்தனமாக ரசிகர்கள் உள்ளனர். எனவே இப்படத்தின் இரண்டாம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை இயக்குனரிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றைய விழாவில் ரஜினியே அப்படி பேசிவிட்டதால் சுரேஷ் கிருஷ்ணாவின் தற்போதைய முடிவு என்னவாகும் இருக்கும் என விசாரித்தபோது…

“நான் இயக்கிய பாட்ஷா பற்றி ரஜினி சாரும் ரசிகர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி சொன்னது போல ‘பாட்ஷா’ படம் போன்று இன்னொரு படம் முடியாது. படத்தை அணுஅணுவாக ரசித்து எடுத்தோம். அதனால்தான் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

‘பாட்ஷா’ படத்தின் பார்ட் 2 பற்றி பேசி வருகின்றனர். ரஜினி முடியாது என்பதால் அஜித்தை வைத்து உருவாக்கலாம். அஜித்துக்கும் ஒரு பெரிய மாஸ் உள்ளதால் ‘பாட்ஷா’ மாதிரியான ஓர் படம் செய்யலாம். அவர் விரும்பினால் அவருக்கான கதையை ரெடி செய்வேன்” என்றார்.