“என்னுடைய மோசமான படங்களை ஆதரிக்காதீர்கள்…’ சூர்யா ஓபன் டாக்..!


“என்னுடைய மோசமான படங்களை ஆதரிக்காதீர்கள்…’ சூர்யா ஓபன் டாக்..!

சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள 24 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.

விக்ரம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயிண்மெண்ட் சார்பாக சூர்யா தயாரித்துள்ளார்.

இவ்விழாவில் சூர்யா பேசியதாவது…

“என்னுடைய நல்ல படங்களுக்கு மட்டுமே ஆதரவு கொடுங்கள். மோசமான படத்தில் நான் நடித்தால் கூட அந்த படங்களை ஆதரிக்காதீர்கள். அப்பொழுதான் என்னால் தரமான படங்களை தொடர்ந்து கொடுக்க முடியும்.

இதில் சமந்தா அவருடைய நடிப்பில் ஒரு புது எனர்ஜியை கொடுத்துள்ளார்.  நித்யா மேனனுடன் நடிக்கும்போது அவர் மீது ஒரு பெரிய மரியாதை எழுந்தது.

பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், தற்கொலையை தேடிச் செல்வது வருத்தமளிக்கிறது” என்று பேசினார்.