சமந்தாவை விக்ரம்-தனுஷ் கைவிட… காப்பாற்றினார் விஜய்..!


சமந்தாவை விக்ரம்-தனுஷ் கைவிட… காப்பாற்றினார் விஜய்..!

‘தெறி’ படத்தின் வெற்றிக்கு விஜய்யின் மாஸ் ஆக்டிங் மற்றும் அட்லியின் மேக்கிங் ஆகியவை முக்கிய காரணம் என்றாலும், நைனிகா மற்றும் சமந்தா ஆகியோர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஓரிரு தினங்களுக்கு முன், இப்படத்தின் சக்ஸ்ஸ் பார்ட்டியும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய பேட்டியில் கூறியதாவது…

“தெறி படத்தின் ரிசல்ட் எப்படி இருக்குமோ? முதலில் பயந்தேன். அதன்பின்னர் வந்த பாசிட்டிவ் ரிசல்ட்டால் மகிழ்ச்சி அடைந்தேன்.“ என்றார்.

மேலும், ‘தெறி’ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றால், சினிமாவை விட்டு விலகுவது பற்றி தான் ஆலோசிக்க இருந்ததாகவும், தெரிவித்தார்.

விக்ரமுடன் நடித்த ’10 எண்றதுக்குள்ள’, தனுஷ் உடன் தங்கமகன்’ ஆகிய படங்கள் சமந்தா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நல்லவேளை ஒரு திறமையான நடிகையை விஜய் காப்பாற்றிவிட்டார்.