இளையராஜா ஆயிரம்.. அமிதாப், ரஜினி, கமல் பங்கேற்பு..?


இளையராஜா ஆயிரம்.. அமிதாப், ரஜினி, கமல் பங்கேற்பு..?

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவை கௌரவிக்கும் நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியை இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் விஜய் டிவி நடத்துகிறது.

இதில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரும் கலந்து கொள்ளவுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அதற்குள் அவர் இந்தியா திரும்பினால் இதில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக பிரபலங்களும் இதில் கலந்து கொள்வார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.