மன்னர்களை பெருமைப்படுத்திய ‘இளையதளபதி’ விஜய்


மன்னர்களை பெருமைப்படுத்திய ‘இளையதளபதி’ விஜய்

என்னங்க… டைட்டிலே ஒரே குழப்பமா இருக்கா? நம்ம விஜய் எப்போ மன்னர் காலத்துக்கு போனாரு? அவுங்களுக்கும்… இவருக்கும் என்ன சம்பந்தம் கேட்குறீங்களா? விஷயம் இருக்கு பாஸ்… இதுபற்றிய ஒரு செய்தி தற்போது இணையத்தில் உலா வருகிறது…

மூவேந்தர் என்றழைக்கப்படும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னமாக ஒவ்வொன்றையும் குறிப்பிடுவர். இதில் சேரர்கள் வில் வித்தையில் சிறந்தவர்கள் என்பதால் இவர்களின் சின்னமாக ‘வில்’லை குறிப்பிடுவர். சோழர்களின் சின்னமாக ‘புலி’யையும், பாண்டியர்களின் சின்னமாக மீனை குறிப்பிடுவர். இவை மூன்றும் விஜய் படங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

விஜய்யின் 50வது படமாக கடந்த 2010ஆம் ஆண்டு ‘சுறா’ வெளியானது. இது பாண்டிய மன்னர்களின் ‘மீன்’ சின்னம். எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் தமன்னா, வடிவேலு, ராதாரவி, யுவராணி, ரியாஸ்கான், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பிரபுதேவா இயக்கிய ‘வில்லு’ படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது சேர மன்னர்களின் சின்னம். தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இது சோழ மன்னர்களின் சின்னம். இவ்வாறாக இந்த மூன்று மன்னர்களையும் தளபதி தன் படங்களின் மூலம் பெருமைப்படுத்தியுள்ளார் என்கின்றனர் ரசிகர்கள்.

பார்த்தீங்களா ஜி… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…?