சூப்பர் ஸ்டாரை கலாய்க்கும் பவர் ஸ்டார்…? விளக்கம் சொல்லும் இயக்குனர்..!


சூப்பர் ஸ்டாரை கலாய்க்கும் பவர் ஸ்டார்…? விளக்கம் சொல்லும் இயக்குனர்..!

கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. ரகுநந்தன் இசையமைக்க காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை ரஜினியின் லிங்கா படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் தயாரிப்பதாக கூறப்பட்டது. இதில் ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக பல காட்சிகள் உள்ளதாகவும் கோலிவுட் செய்திகள் தெரிவித்து வந்தன.

மேலும் இப்படத்தின் விளம்பரங்களில் எம்ஜிஆரோடு பவர்ஸ்டார் சீனிவாசன் இருப்பது போன்ற டிசைன்கள் இருந்தன.

இதுகுறித்து இயக்குனர் திரைவண்ணன் கூறுகையில்…

“முதலில் எம்.ஜி.ஆர் ஒரு சினிமா ஸ்டார். அப்புறம்தான் அவர் ஒரு முதல்வர். நான் அவரை ஒரு சினிமா கலைஞனாக நினைத்துதான் இதுபோன்ற டிசைன்களை உருவாக்கினோம். வேறு எந்த உள்நோக்கமும் இல்ல”.

இப்படத்தில் ரஜினியை கிண்டல் செய்வதாக செய்திகள் வந்துள்ளன. நாங்கள் ஒரே சினிமா குடும்பம். எங்களுக்கு எல்லாருடைய ஆதரவும் வேணும். சூப்பர்ஸ்டாரை கிண்டல் பண்ற அளவுக்கு நாங்க வளரல.

இந்தப் படம் யாரையும் காயப்படுத்தாது. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

இப்படதை கோபி என்பவர்தான் தயாரிக்கிறார். லிங்கா விநியோகஸ்தர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. என்றார்.