மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் ‘இருமுகன்’ விக்ரம்..!


மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் ‘இருமுகன்’ விக்ரம்..!

ஆனந்த் சங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் முதன்முறையாக நயன்தாரா மற்றும் நித்யா மேனனுடன் ஜோடியாக நடித்து வருகிறார் விக்ரம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.

இதில் விக்ரம் இருவேடங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

ஆனால் இதில் எவருடைய சாயலும் இல்லாத வகையில் ஒரு தனித்துவமான திருநங்கை கேரக்டரில் நடித்து வருகிறாராம்.

இதற்காக பல திருநங்கைகளை நேரில் சந்தித்து, அவர்களை பின்தொடர்ந்து, அவர்களது, பாடிலாங்குவேஜை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறாராம்.

இதனால், அவருக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.