இன்று மாலை சிவகார்த்திகேயன் தரும் ‘ரெமோ’ விருந்து…!


இன்று மாலை சிவகார்த்திகேயன் தரும் ‘ரெமோ’ விருந்து…!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்க ஆர். டி ராஜா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதுநாள் வரை இப்படம் தொடர்பாக பர்ஸ்ட் லுக்கோ, எந்த வொரு புகைப்படமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.