தனுஷ், குஷ்பூ, பாலா, லிங்குசாமி நிறுவனங்களில் அதிரடி சோதனை..!


தனுஷ், குஷ்பூ, பாலா, லிங்குசாமி நிறுவனங்களில் அதிரடி சோதனை..!

பிரம்மாண்டமாக படங்கள் உருவானால் அப்படம் வெளியாகும் போது அதன் மீதான எதிர்பார்ப்பும் பிரம்மாண்டமாகவே இருக்கும். எனவே, அப்படம் சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் வீடு, அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது தற்போது வாடிக்கையாகவே மாறியுள்ளது.

புலி படம் வெளியாகும்போது விஜய்க்கும் தயாரிப்பாளருக்கும் இந்த சோதனை ஏற்பட்டது. அதே நிலைதான் தாரை தப்பட்டை படத்தை இயக்கியுள்ள பாலாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

இவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை ஓரிரு தினங்களுக்கு முன் மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம், சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை-2’ படத்தை தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், இப்படத்தை வெளியிடும் ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ‘ரஜினி முருகன்’ படத்தை தயாரித்துள்ள லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் ஆகிய இடங்களில் மத்திய சேவை வரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.