வாய்ப்பு கேட்க போன இடத்தில் வாங்கி கட்டிக் கொண்ட இனியா ‘ஆன்ட்டி’


வாய்ப்பு கேட்க போன இடத்தில் வாங்கி கட்டிக் கொண்ட இனியா ‘ஆன்ட்டி’

சேரன் நடித்த ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் நடித்த இனியா, ‘வாகை சூடவா’ படத்தின் முலம் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.  இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகளை வென்றார்.

தொடர்ந்து ‘மௌன குரு’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘அம்மாவின் கைப்பேசி’, ‘கண் பேசும் வார்த்தைகள்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நிறைய மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழில்’ வாகை சூடவா’ படத்திற்கு பிறகு பேர் சொல்லும் படமாக ஒரு படம் கூட இவருக்கு அமையவில்லை.

இழந்த மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள தென்னிந்திய இயக்குனர்களுக்கு தகவல் அனுப்பி கொண்டிருக்கிறார். தற்போது, ஒரு பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்க போயிருக்கிறார்.  வாய்ப்பு கேட்க போன இடத்தில் வாங்கி கட்டிக் கொண்டு வந்துள்ளார் இனியா.

இப்படி ஆன்ட்டி மாதிரி உடம்பு வைத்து இருந்தால் எப்படி வாய்ப்பு கொடுப்பது? என்று இனியாவை பார்த்து கூறினாராம் அந்த இயக்குனர்.  இதனைக் கேட்ட இனியா என்ன சொல்வதென்று தெரியாமல் உடனே இடத்தை காலி செய்து விட்டாராம். இனிமேல் சாப்பாடு விஷயத்தில் கவனம் கொள்ள முடிவு எடுத்துள்ளாராம் இந்த முன்னாள் திருவனந்தபுரத்து அழகி இனியா.