ரஜினி-அஜித்துடன் இணையும் சிம்பு-ஜெயம் ரவி..!


ரஜினி-அஜித்துடன் இணையும் சிம்பு-ஜெயம் ரவி..!

மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாட தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் அன்றைய தினத்தில் ரஜினியின் கபாலி டீசரும் வெளியாகவுள்ளதால், இந்தியளவில் டிரெண்டாக்க தலைவர் ரஜினியின் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

‘லிங்கா’ படத்திற்கு பிறகு, ஒரு வருட இடைவெளிக்கு பின்னர் வருவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதே நாளில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாம்.

மேலும் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக, கடந்தாண்டு வெளியாகி தென்னிந்திய சினிமாவை கலக்கிய ஜெயம் ரவியின் தனி ஒருவன் படம் சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.